மீண்டும் கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது! உயர் அதிகாரிகளின் அவசர கூட்டம்
கொழும்பு மாநகரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர்களுக்கு விசேட பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண பிரதான பொலிஸ் மா அதிபர் இன்று காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் மா அதிபர்களையும் தொடர்பு கொண்டு இந்த அறிவித்தலை பிறப்பித்துள்ளார்.
கடுமையான நடவடிக்கை

இதன்போது, கொழும்பின் பாதுகாப்பை மீண்டும் வீதித் தடைகளுடன் பலப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் தற்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் மேல்மாகாண பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து இந்த உத்தரவுகளை வழங்குவதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்? News Lankasri