இடர்பாடுகளை தெரியப்படுத்த மட்டக்களப்பு மக்களுக்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்
இடர்பாடுகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத்தினால் நேரடியாக இணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளமண்டிய பிரதேசங்கள் மற்றும் வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆபத்துள்ள பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் '0757273543' என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி தங்களின் இடர்கள் தொடர்பாக தெரியப்படுத்த முடியும்.
குறிப்பாக சித்தாண்டி, வந்தாறுமூலை, மாவடிவேம்பு, ஈரளக்குளம் மற்றும் கிரான் பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக தங்களுக்கு தேவைப்படும் உடனடி தேவைகள் மற்றும் பாதுகாப்பான விஷயங்களை உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கும் பொருட்டு இந்தத் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உடனடியான கலந்துரையாடல்
மேலும், ஏற்படக்கூடிய இடர்பாடுகளையும் அனர்த்தங்களையும் தவிர்க்கும் முகமாக உரிய அரச உயர் அதிகாரிகளுடன் உடனடியான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

இதன்போது, மக்களுக்கான சேவைகளை தாமதிக்காமல் உடனடியாக வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத்தால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
மகளிர் உலகக்கோப்பை - இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ News Lankasri