பெண்கள் - சிறுமிகளுக்கு அவசர உதவி.. ஐக்கிய நாடுகள் முன்னெடுக்கும் திட்டம்!
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரி சர்வதேச சமூகத்தை நாடியுள்ளது.
நவம்பர் 28ஆம் திகதி அன்று சூறாவளி தாக்கியதில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 520,000 வயதுவந்த பெண்கள், குறிப்பாக 22,500 கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
மருத்துவமனைகள் சேதமடைந்து வீதிகள் தடைப்பட்டுள்ளதால், அவசர மகப்பேறு பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடைபட்டுள்ளன.
யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை! 17 வருடங்களின் பின்னர் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை..
அத்தியாவசிய சுகாதார சேவைகள்
மேலும், இடம்பெயர்வு மையங்களில் உள்ள நெரிசல் மற்றும் தனியுரிமை இல்லாத நிலை காரணமாக பாலின அடிப்படையிலான வன்முறை அபாயம் அதிகரித்துள்ளது.

நிலைமை மோசமடைந்து வருவதால், சனத்தொகை நிதியமானது 208,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரப் பாதுகாப்பு, பாலின வன்முறை தடுப்பு மற்றும் மனநல ஆதரவு உள்ளிட்ட சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இதில் நடமாடும் கிளினிக்குகள், அவசியமான விநியோகங்கள் மற்றும் பாதுகாப்பான மையங்களை மீட்டமைத்தல் ஆகியவை அடங்கும்.
இருப்பினும், தேவையான நிதியில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே பெறப்பட்டுள்ள நிலையில், உடனடி சர்வதேச ஆதரவு இல்லாவிட்டால் முக்கியமான சேவை இடைவெளிகள் ஏற்பட்டு, பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பைப் பாதிக்கும் என்று ஐ.நா சனத்தொகை நிதியம் எச்சரித்துள்ளது.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam