2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி - அரச அதிகாரிகளுக்கு அதிரடி தடை
அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி சம்பவம் தொடர்பில் ஐந்து அரச அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம் - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி
நிதி மோசடி
அதேவேளை அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.

இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து அரச அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.