எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு
புதிய இணைப்பு
எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று (26) மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த வாக்களிப்பின் நிலவரப்படி 63.4% வாக்குகள் பதிவாகியுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ஏ தர்மசிறி தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் போட்டியிடும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்த தேர்தலில் 48 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ள நிலையில் இதில் வாக்களிக்க 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றனர்.
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டிருந்தார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகளுக்காக தனது அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |