மஸ்கின் திட்டத்தால் மோடி அரசாங்கத்துக்கு பாரிய சிக்கல்
அமெரிக்காவின் USAID அமைப்பினால் இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்துவதாக DODGE அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில்தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்த இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ட்ரம்ப் அரசின் தேவையற்ற செலவு
இந்நிலையில் ட்ரம்ப் அரசின் தேவையற்ற செலவை குறைக்க எலான் மஸ்க் தலைமையில் அவர் உருவாக்கிய DODGE ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இதில் முக்கியமாக பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கான நிதி நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |