பிரிக்ஸ் உச்சிமாநாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7ஆம் திகதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில்(Brazil) அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.
மேலும் உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் உச்சிமாநாடு
கடந்த 2009ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது.

பிறகு, 2010ஆம் ஆண்டு தென் ஆபிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது. கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்துள்ளது.
சவுதி அரேபியாவிற்கும் இந்த அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam