எலோன் மஸ்க்கின் AI தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
எலோன் மஸ்க்கின் 'xAI' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'Grok' செயற்கை நுண்ணறிவு (AI) செட்பொட், ஆபாசப் படங்களை உருவாக்குவதாக எழுந்த முறைப்பாட்டை தொடர்ந்து, அதன் பட உருவாக்க வசதிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சமூக வலைதளமான Xஇல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள Grok AI மூலம், ஒரு நபரின் அனுமதியின்றி அவர்களின் உடைகளைக் களைந்த நிலையிலோ அல்லது ஆபாசமான நிலையிலோ படங்களை மாற்றியமைக்க முடியும் என்ற முறைப்பாடு எழுந்தது.
இது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
கட்டணம் செலுத்திய பயனர்கள்
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இதனை "தொழில் மயமாக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்" என்று கண்டித்தனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், xAI நிறுவனம் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

அதன்படி, இனிமேல் Grok AI மூலம் படங்களை உருவாக்கவோ அல்லது திருத்தவோ வேண்டுமென்றால், பயனர் கண்டிப்பாக X தளத்தின் 'Premium' சந்தாதாரராக (Paid Subscriber) இருக்க வேண்டும்.
சாதாரணப் பயனர்களின் பதிவுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக Grok தானாகப் படங்களை உருவாக்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், தனிப்பட்ட Grok செயலி மற்றும் கட்டணம் செலுத்திய பயனர்கள் இன்னும் இது போன்ற படங்களை உருவாக்க முடியும் என்ற சிக்கல் நீடிக்கிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri