எலான் மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது போதை பொருள் பயன்படுத்தியதாக சர்வதேச பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் எலான் மஸ்க் அதனை மறுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் மறுப்பு
''நான் இப்போது எந்தவிதமான போதை மருந்துகளும் பயன்படுத்தவில்லை. நியூயோர்க் டைம்ஸ் பொய் சொல்கிறது,” எனக் கண்டித்துள்ளார்.
😂💯
— Elon Musk (@elonmusk) May 31, 2025
Also, to be clear, I am NOT taking drugs! The New York Times was lying their ass off.
I tried *prescription* ketamine a few years ago and said so on 𝕏, so this not even news. It helps for getting out of dark mental holes, but haven’t taken it since then.
அவர் மேலும் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்னர் மனச்சோர்வுக்கு மருத்துவர் பரிந்துரைத்த 'கேட்டமீன்(ketamine)' மருந்தை எடுத்தேன். அதை நான் எக்ஸ்-இல் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.
இது புதுசான செய்தியல்ல. அதையும் நிறுத்திய நிலையில் இருக்கிறேன்,” எனவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்பாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் , மஸ்கின் மருந்து பழக்கத்தைப் பற்றி கேட்ட போது “எனக்கு தெரியாது.
ஆனால் எலான் ஒரு அருமையான நபர்,” என்று பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக எலான் மஸ்க்கை நியமித்திருந்தார்.
அந்த பதவியில் இருந்து சமீபத்தில் எலான் மஸ்க் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




