உலகத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தவுள்ள நபர்! கணினியுடன் இணைக்கப்படவுள்ள மனித மூளை (Video)
மூளையிலுள்ள தேவையற்ற நினைவுகளை அழிக்க முடியுமா? அதுவும் அந்த நடவடிக்கையை ஒரு சிப் மூலம் செயற்படுத்த முடியுமா? இழந்த பார்வையை மீள பெற முடியுமா? இவையனைத்தையும் நபரொருவர் செயற்படுத்தவுள்ளார்.
இதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றியை தொடர்ந்து மனிதனின் மூளைக்குள்ளும் சிப் பொருத்தி சோதிக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டிவிட்டர் நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் மனித மூளையை ஆராய்ச்சி செய்யும் நியூராலிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் மனிதனின் மூளையை கணினியுடன் இணைத்து செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விலங்குகளை தொடர்ந்து மனித மூளைக்குள் சிப் பொருத்தி சோதனை நடத்தும் அடுத்த கட்டத்திற்கு நியூராலிங் நிறுவனம் முன்னேறி இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்கள் காணொளி வடிவில்,

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
