ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் எலான் மஸ்க்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப், அரசு நிர்வாகத்தின் செலவுகளைக் குறைப்பதற்கு, அரசாங்க செயல்திறன் துறையை(DOGE) உருவாக்கி அதன் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க்கை(Elon Musk) நியமித்தார்.
பதவி விலகல்
இந்த துறைக்கு பொறுப்பேற்ற எலான் மஸ்க், ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, அரசு செலவுகளை குறைப்பது போன்ற பல்வேறு அதிரடி நவடிக்கைகளை மேற்கொண்டார்.
அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக 130 நாள்கள் மட்டுமே பொறுப்பு வகிக்க ஒப்புக் கொண்டிருந்த மஸ்க்கின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்தநிலையிலேயே, எலான் மஸ்க் DOGE பொறுப்பில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
புதிய வரி மசோதா
இது தொடர்பாக மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
ட்ரம்பின் புதிய வரி மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
