ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை
சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் ஜேர்மன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜேர்மனியில் பெப்ரவரி 23ஆம் திகதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் SPD கட்சி சார்பாக மீண்டும் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே எலான் மஸ்க் ஜேர்மன் மக்களிடம் கோரியுள்ளார்.
மேலும், ஜேர்மன் மொழியில் சாக் நீன் சூ ஸ்கோல்ஸ் (Sag Nein zu Scholz!) என தமது சமூக ஊடக பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
டிசம்பர் மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷோல்ஸ் அரசாங்கம் தோல்வியடைந்ததை அடுத்து, ஜேர்மனியின் புதிய நாடாளுமன்றத்திற்கான திடீர் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் திகதி அன்று நடைபெறவுள்ளது.
ஜேர்மனியில் செயற்பட்டு வரும் தீவிர வலதுசாரி கட்சியான AfDக்கு எலான் மஸ்க் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார்.
AfD கட்சியின் தலைவர்களில் ஒருவரான Alice Weidel-ஐ புகழ்ந்துள்ள எலான் மஸ்க், அவருக்கான தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு வழங்கப்படும் விலை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |