எல்ல - வெல்லவாய விபத்து.. பேருந்து உரிமையாளருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
எல்ல வெல்லவாயவில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துக்குள்ளான பேருந்தை சரியாக பராமரிக்காத காரணத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராவண எல்ல வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை(04) ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தில் இருந்த 34 பேரில்15 பேர் உயிரிழந்திருந்தனர்.
பலர் காயம்
மேலும், 18 பேர் காயமடைந்ததாகவும் ஒரு பயணி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற குறித்த தனியார் சுற்றுலாப் பேருந்து, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு சொகுசு காரில் மோதி பள்ளத்தில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025