திடீரென தனது நெருங்கிய நண்பரை சந்தித்த மகிந்த! வெளிவரும் பல அரசியல் இரகசியங்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருடைய நண்பரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் மகிந்த ராஜபக்ச, தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,''நான் ஒரு பழைய தோழரான வாசுதேவ நாணயக்காரவைச் சந்திக்கச் சென்று, அவரது வீட்டில் அவரது நலம் விசாரித்தேன். வாசுதேவ நாணயக்காரவும் நானும் பல யுகங்களாக அரசியலில் ஒன்றாக இருக்கிறோம்.
அற்புதமான நண்பர்
வாசுதேவ ஒரு அற்புதமான நண்பர்.நாங்கள் இருவரும் 1970 இல் அரசியலில் நுழைந்தோம். எங்கள் நட்பு மிகவும் பழமையானது. அது போலவே சிக்கலானது.

கடந்த காலத்தில் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை நடத்தப்பட்ட பாதயாத்திரை இப்போது பலரின் நினைவிலிருந்து மறைந்துவிட்டதாக நினைக்கிறேன்.
காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுப்பது, வடக்கு-கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் கொண்டுவருவது மற்றும் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்ப்பது என்ற நோக்கத்துடன் அந்த பாதயாத்திரை நடத்தப்பட்டது. அந்த பாதயாத்திரை மார்ச் 16, 1992 அன்று, விகாரமஹாதேவி பூங்காவின் முன் தொடங்கியது.
பல தோழர்கள் அதற்காக இணைந்தனர். அவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் ஒருவராவார்.
நிகழ்வுகள்
1992 ஜூலை முதலாம் திகதி மதியம் 12.35 மணிக்கு நாடு தழுவிய அளவில் எழுந்த போராட்டத்தை வாசு மறக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும்.

பயங்கரவாத காலத்தில் இலங்கையில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காணாமல் போனதற்கு எதிராகவும், காணாமல் போனவர்களின் மனித உரிமைகளுக்காகவும் நான் குரல் எழுப்பியபோது வாசுவும் என்னுடன் இருந்தார்.
அந்த நிகழ்வுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. அந்த நிகழ்வுகள் இலங்கை மக்கள் சார்பு அரசியலின் அடையாளங்கள்.
எங்கள் அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், நாங்கள் இருவரும் எப்போதும் மக்களுக்காகப் போராடினோம். அன்புள்ள வாசு, நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.''என பதிவிட்டுள்ளார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri