கிளிநொச்சியில் தீவிரமடையும் யானைகளின் அட்டகாசம்: விடுக்கப்பட்ட கோரிக்கை
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் புகுந்த காட்டு யானைகள் ஒரு ஏக்கர் அளவிலான வாழை மரங்கள் மற்றும் தென்னையை முற்றாக சேதப்படுத்தியுள்ளதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(12.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் அட்டகாசம்
புளியம்பொக்கனை கம நலசேவை பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஏக்கர் வாழை, தென்னை மரங்களை காட்டு யானைகள் புகுந்து முற்றாக சேதப்படுத்தியுள்ளது.

வாழை செய்கை வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு எனக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டினை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam