முல்லைத்தீவில் மூன்று நாட்களாக கிடங்கில் வீழ்ந்து போராடிய யானை மீட்பு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் யானை ஒன்று, கிடங்கில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்த வந்த நிலையில், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று(11.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிடங்கில் சிக்கிய யானை
மானம்புல் குளம் என்ற ஒரு சிறிய கிணற்றுக்கு அருகில் மண் எடுப்பதற்காக தோண்டிய கிடங்கில் யானை ஒன்று விழுந்துள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்களாக வெளியேற முடியாமல் தவித்து வந்த நிலையில், அதனை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீண்ட நேர வனஜீவராசிகள் திளைக்கள அதிகாரிகளின் போராட்டத்திற்கு பின் கனரக இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி யானையை வெளியில் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.