வாய்வெடி உட்கொண்டதில் யானைக்குட்டி படுகாயம்
திருகோணமலை - ஜெயந்திபுர பகுதியில் யானை குட்டியொன்று நேற்று வாய்வெடி உட்கொண்டு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுர அப்பகுதியில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வந்த நிலையில் 8 மாத யானைக்குட்டியொன்று காயப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட யானை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் யானை குட்டியை சிகிச்சைக்காக கிரிதல பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மிருகங்களை வேட்டையாடும் நபர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி மிருக வேட்டை யில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் யானைகள் அதிக அளவில் உயிரிழப்பதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக சட்டவிரோதமாக காட்டுப்பகுதிக்குள் சென்று வேட்டையாடும் நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam