புதுக்குடியிருப்பில் கிராமத்துக்குள் புகுந்த யானை - கடையை உடைத்து சேதம்
முல்லைத்தீவு - கோம்பாவில் பகுதியில் இன்று (30.09.2026) அதிகாலை 4 மணியளவில் கிராமத்துக்குள் புகுந்த யானை வீட்டு காணிகளுக்குள் சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
இதன்போது கோம்பாவில் நான்கு சந்தியில் அமைந்திருந்த கடையொன்றையும் யானை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், கடைக்குள் இருந்த சீனி பைகளை எடுத்து சாப்பிட்ட பின்னர், அவற்றை வீதியில் தூக்கி வீசி பின்னர் துர்க்கா வீதி ஊடாக யானை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை
அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களுக்குள் யானைகள் தொடர்ச்சியாக உட்புகுந்து, வீடுகள் மற்றும் மக்களின் உடமைகளை சேதப்படுத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தமது கிராமங்களை பாதுகாக்க யானை வேலியை அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
சென்னை 28 படத்தின் 3வது பாகமா.... அட்டகாசமாக வந்த அறிவிப்பு, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... Cineulagam