மூன்று நாட்களாக வயல் சேற்றில் சிக்கிய யானை பரிதாபமாக உயிரிழப்பு
அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த காட்டு யானை தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(24.10.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மூன்று நாட்களாக போராட்டம்
இதேவேளை இறந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த யானையைக் காப்பாற்றுவதற்குப் பல்வேறு தீவிர மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
கடந்த புதன்கிழமை(21) நோய்வாய்ப்பட்டு கிடந்த நிலையில், கண்டறியப்பட்ட குறித்த ஆண் யானையைக் காப்பாற்றுவதற்காக அம்பாறை மாவட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியான அவசர சிகிச்சைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.