முல்லைத்தீவில் 73 இடங்களில் முன்னெடுக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பு
தேசிய ரீதியாக காட்டு யானைக் கணக்கெடுப்பானது 13 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்ச்சியாக 17,18,19ம் திகதிகளில் இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வெலிஓயா ஆகிய நான்கு பிரதான தொகுதிகளின் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பதினொரு உப பிரிவுகளின் 73 மத்திய நிலையங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கை
குறிப்பாக தண்ணீர் உள்ள இடங்களில் கண்காணித்தல் என்ற முறையினைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள யானைகள் நீர் குடிக்கும் குளங்களின் கரையோர பகுதிகளை வைத்து இந்த கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காக மாவட்டத்தில் 155 கணிப்பாளர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர்.
யானை மனித மோதல்
இலங்கையில் இறுதியாக 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை மனித மோதல் அதிகரித்த மாவட்டமாக காணப்படுகின்ற நிலையில் பல பிரதேசங்களில் யானைவேலிகள் அமைத்து கொடுக்கப்படாத நிலை இன்றும் தொடர்கின்றது
இதனால் ஒவ்வொரு போக விவசாய செய்கையிலும் யானையால் பாரிய அழிவினை விவசாயிகள் எதிர்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri