யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞரொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் இளைஞரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் மூதூர் - இறால்குழி பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் செந்தீபன் (28 வயது) என்பவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞர் வயலுக்குக் காவலுக்குச் சென்ற வேளையில் யானையை துரத்த முற்பட்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அவர் காயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri