வவுனியாவில் யானை தாக்கியதில் ஒருவர் பலி
வவுனியா(Vavuniya) - வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி நபர் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான மோகனகாந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் பலி
நேற்று(10) மாலை வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது வீதிக்கு வந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.

குறித்த யானை சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்துள்ளதால் அந்த வீதி வழியாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவுப்படைகளால் இருமுனைத் தாக்குதல்: நெருக்கடியில் மத்திய கிழக்கு News Lankasri
விமானப் பயணத்தில் ஷீட் மாஸ்க் பயன்படுத்தலாமா? திரிஷாவின் வைரல் செல்ஃபிக்கு மருத்துவர் விளக்கம் Manithan