ஜனாதிபதியின் உத்தரவில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்துப் பணிகளும் அத்தியாவசிய பணிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய பணிகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கம் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழிற்சங்களின் கடும் அதிருப்தி
மின்சார சபையின் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரசபையில் அரசாங்கம் மேற்கொள்ள உள்ள மாற்றங்கள் தொடர்பில் தொழிற்சங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இந்த பின்னணியில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி குமாநாயக்கவின் கையொப்பத்துடன நேற்றைய தினம் திகதியிடப்பட்டு இந்த வர்தத்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




