மின் கட்டணத்தை குறைக்க முன்வந்துள்ள இலங்கை மின்சார சபை
இலங்கை மின்சார சபை கடந்த ஒன்பது வருட காலத்தின் பின் இலாபத்தை பதிவு செய்ததன் பின் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3.34 வீதத்தினால் மின்சார கட்டணத்தை குறைக்க முன்வந்துள்ளது.
இது தொடர்பான முன்மொழிவு பொதுப்பயன்பாடுகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறையும் கட்டணம்
அதன்படி, தற்போது 180 ரூபாவை செலுத்தும் 0 - 30 கிலோவோட் மின்சார நுகர்வோர்களுக்கு 15 ரூபாய் குறைவு ஏற்படும் அதேவேளை 91 - 120 கிலோவாட் மின்சாரத்தை நுகர்வோர் 60 ரூபா குறைப்பை பெறுவார்கள்.

இதன்படி அவர்களின் கட்டணம் 1,180 ரூபாவிலிருந்து 1,120 ரூபாவாகக் குறையவுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் கொள்கை அறிவுறுத்தல்களின் அடிப்படையில் குறைந்த வருமானம் உடைய பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமான வணிகங்களின் நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய கட்டண முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan