குடிக்க தண்ணீர் கேட்ட நபரின் மோசமான செயல் : அடித்துக் கொலை செய்த பெண்
தங்காலை பிரதேசத்தில் வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரை அந்த பெண் கூரிய ஆயுதத்ததால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மொரகெட்டி ஆர கிழக்கு - நாகுலுகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.
பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத போது, குறித்த நபர் வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
பெண் தண்ணீர் கொடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்ற போது, பின்னால் வந்த நபர், பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால் தாக்கியுள்ளார்.
பின்னர், அந்த தரையில் விழுந்ததையடுத்து, குறித்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
