தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
1996ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 72 மணித்தியால தொழிற்சங்க போராட்டம் போன்று எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
அரசாங்கம், கெரவலப்பிட்டிய மின்சார நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு கையளித்த உடன்படிக்கையை ஆட்சேபித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் (Ranjan Jayalal) தொிவித்துள்ளார்.
எனினும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் திகதி எதனையும் தீர்மானிக்கவில்லை.
தமது கோரிக்கைகைளை வலியுறுத்தி கையொப்பங்களை திரட்டும் செயற்பாடு இடம்பெறவுள்ளதாக ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமையன்று மின்சாரசபை தொழிற்சங்கங்கள் கூடி 72 மணித்தியால தொழிற்சங்க போராட்டம் குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் தொிவித்துள்ளார்.
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri