மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர்
சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்ட வந்த மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரியநீலாவணைப் பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம், கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றுக்குச் சென்று மின்மானியை பரீட்சித்துள்ளார்.
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த உத்தியோகத்தர்
பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற 09 வயது மதிக்கத்தக்க சிறுவனை அருகில் உள்ள வீட்டின் மின் மானியைப் பார்வையிடத் துணைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் அங்கு சிறுவனுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

அதன்பின்னர் சிறுவன் தனக்கு நடந்த அனைத்து விடயங்களையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த மின்சார சபை ஊழியர் அன்றைய தினம் தனக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதை அறிந்து மறுநாளான வெள்ளிக்கிழமை (27) அதிகாலை அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து மனைவி உள்ளிட்ட உறவினர் தூக்கில் தொங்கியவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும், தூக்கில் தொங்கியவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிட்டன.
உயிரிழந்தவர், உடல் கூற்று விசாரணையின்படி கழுத்துப் பகுதி சுருக்கினால் இறுகியதால் மூச்சுத் திணறி இறந்துள்ளார் தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.

உயிரிழந்த நபர் இரு பிள்ளைகளளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri