அரச நிறுவனங்களில் மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள மின்சார சபை
இலங்கை மின்சார சபை, கடந்த ஆண்டில் அரச நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட நிறுவனமாக பதிவாகியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை மிகப்பெரிய நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் 141.6 பில்லியன் ரூபா லாபம் ஈட்டிய மின்சார சபை, 2025-ஆம் ஆண்டில் 38.7 பில்லியன் ரூபா என்ற பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளது.
மின்சாரக் கட்டணத் திருத்தம்
மின்சாரக் கட்டணத் திருத்தம், செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் செலவுக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் ஆகியவையே இதற்குக் காரணமாகும் என்று மின்சார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே மின்சார சபையின் தரவுகளின்படி, ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனை விலை 36.01-ரூபாவிலிருந்து 26.24 ரூபாவாகக் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் ஒரு யூனிட்டின் அடக்க விலை 30.23 ரூபாவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வின் இறுதிச் சுமை கடைசியாக மின்பாவனையாளர்கள் தலையிலேயே கட்டப்படவுள்ளது.