மின்கட்டண அதிகரிப்பு குறித்து மின்சார சபையின் விளக்கம்
எதிர்வரும் மாதம் தொடக்கம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், இந்த வருட ஆரம்பத்தில் இருந்த கட்டணத்தை விடவும் குறைவானதாகவே மின்கட்டணம் அறவிடப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மின்சார சபையின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் மாதம் தொடக்கம் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
மின்சார உற்பத்தி
கடந்த 2014-2022 வரையான காலப்பகுதியில் மின்சார உற்பத்திக்கான நிலக்கரி, டீசல் போன்ற உற்பத்திப் பொருட்களுக்கான கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் முறையாக செலுத்தப்படவில்லை.
அதன் காரணமாக மின்சார சபை தற்போது பாரிய கடன் சுமையை எதிர்கொண்டுள்ளது. அதன் காரணமாகவே எதிர்வரும் மாதம் தொடக்கம் மின்கட்டண அதிகரிப்பு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அதன் பின் அறவிடப்படும் தொகை கடந்த ஜனவரியில் அறவிடப்பட்ட தொகையைப் பார்க்கிலும் குறைவானதாகவே இருக்கும் என்றும் மின்சார சபை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
