மின்சார கட்டண விவகாரம்: ஆரம்பமாகிய கருத்து கோரும் நடவடிக்கை
மின்சார கட்டணம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஆரம்பமாகியுள்ளது.
இதன் முதல் கட்டம் மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட 50 பேர் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்து
மேலும். ஊவா மாகாணத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதியும் மேல் மாகாணத்தில் அடுத்த மாதம் 10 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
எவரேனும் ஒருவருக்கு கருத்துக்களை முன்வைக்க வேண்டுமாயின் 0772943193 எனும் வாட்ஸ் அப் இலக்கத்தினூடாக தம்மை பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்துக்கள் கேட்டறியப்பட்ட பின்னர் மின்கட்டண திருத்தம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |