புதிய மின் கட்டணம் தொடர்பான அறிவிப்பு
புதிய மின் கட்டணம் தொடர்பில் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அவர் இன்று(23.05.2023) வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய மின்சார கட்டணங்கள் தொடர்பில் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும்.
புதிய மின் கட்டணம்
இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதில் ஜூன் 1ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17ஆவது பிரிவின்படி, கட்டண திருத்தம் தொடர்பில், கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
