மின் கட்டண திருத்தம்! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோபுர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
செலவு அடிப்படையிலான விலை சூத்திரம்
அந்த பதிவில்,அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
Electricity prices will be reviewed & revised by July 2023, keeping in line with the Govt Policy & Cabinet decision taken in Dec 2022, to implement a cost reflective pricing mechanism and to review & revise electricity prices biannually in January & July of every year.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 3, 2023
அந்த முடிவுகளின்படி, செலவு அடிப்படையிலான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதை மறுபரிசீலனை செய்யவும், திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
