விரைவில் புதிய விலை சூத்திரம் அறிமுகம்! அமைச்சரின் அறிவிப்பு
புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை ஊக்குவிக்கும் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களுக்கான கட்டண அறவீடு குறித்த புதிய சூத்திரமொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
புதிய சூத்திரம்
புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
முதன்மை கட்டணம், திறைசேரி பத்திர கட்டணம் மற்றும் பணவீக்கம் போன்ற காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இந்த சூத்திரம் உருவாக்கப்படவுள்ளது.
மேலும் 20 ஆண்டுகளுக்கான திட்டமாக இது அமையப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cabinet approval was granted yesterday for CEB to adopt a new formula to calculate the feeding tariff for Renewable Energy projects to encourage more investments to the sector. Formula will be variable over 20 years & front loading the first 10 years taking into account Average…
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 3, 2023