யாழ்.மாவட்டத்திற்கான பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் திறந்து வைப்பு
தேர்தல்கள் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் எற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது.
இன்று (03.09.2023) இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேர்தல்கள் திணைக்கள நாயகம் தவிசாளர் க. ஸ்ரீ சமன் ஸ்ரீ ரத்தனநாயக்க கலந்து கொண்டு கட்டத்தை திறந்து வைத்தார்.
தேர்தல்கள் திணைக்களம்
இக்கட்டிடத்திற்கு (2019.06) அன்று ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்காக 08 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் தேர்தல்கள் திணைக்கள செயலாளர் ஆர்.ப.கேரத், தேர்தல்கள் திணைக்கள உறுப்பினர் ஏ.பாயிஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆ.அமல்ராஜ், பிரதேச செயலாளர்கள், உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதுவரை காலமும் யாழ் மாவட்டச் செயலகத்திற்குள் இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்கள பணிகள் இனிமேல் யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
