தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேனி பெரியகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில், முன்னாள் முதலமைச்சரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தனது வாக்கை செலுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி
“எங்கள் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பை காண முடிகின்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவார். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.
வாக்கு நிலவரம்
இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 2,15,40,712 வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்ச வாக்குகள் பதிவான மாவட்டங்களாக திருப்பூர் - 42.45 சதவீதம், நாமக்கல் - 41.41 சதவீதம், ஈரோடு - 41.00 சதவீதம், சேலம் - 40.56 சதவீதம், கரூர் - 39.70 சதவீதம் பதிவாகியுள்ளது.
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam