தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர்.
வாக்கு பதிவு
நடிகை குஷ்பூ, சுந்தர்.சி தங்களது மகளுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.
நீலாங்கரையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது மனைவியுடன் வாக்களித்துள்ளார்.

வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற நடிகர் அஜித்குமார் காலை 6.55 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்களித்துள்ளார்.
வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை நடிகர் அஜித்குமார் காண்பித்தார்.