இடைக்காலத் தேர்தல் பிரசாரம்: கம்யூனிசம் என்ற வார்த்தையை ஆயுதமாக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்காவில் வரவிருக்கும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரங்களில் 'கம்யூனிசம்' என்ற வார்த்தையைத் தீவிரமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அவர் பொது மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் 81 தடவைகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி தனது அரசியல் எதிரிகளான ஜனநாயகக் கட்சியினரைச் சாடியுள்ளார்.
கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகள்
கடந்த ஜூன் 23 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே ட்ரம்பின் இந்த உத்தி தீவிரமடைந்துள்ளது.

வெற்றி பெற்ற சில வேட்பாளர்களை "தீவிரமான, கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகள்" என்று அவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தின உரையிலும், கம்யூனிசத்தை ஒழிக்கப்பட வேண்டிய ஒரு புற்றுநோய் என அவர் வர்ணித்திருந்தார்.
'கம்யூனிச' முத்திரை
ஆய்வுகளும் தேர்தல் உத்திகளும் ட்ரம்ப் குழுவினரால் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, இந்த கம்யூனிச எதிர்ப்புப் பிரசாரம் குடியரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்துவதோடு, வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க உதவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, இடதுசாரி அரசாங்கங்களின் பிடியில் இருந்து தப்பித்து புளோரிடா மற்றும் டெக்சாஸ் போன்ற மாநிலங்களில் குடியேறியுள்ள ஹிஸ்பானிக் வம்சாவளி வாக்காளர்களைக் கவர இந்த உத்தி பெரிதும் பயன்படும் என குடியரசுக் கட்சியினர் நம்புகின்றனர்.
எனினும், பனிப்போர் காலத்தைக் கண்டிராத இளைய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் நடுநிலையான வாக்காளர்கள் மத்தியில் இந்த 'கம்யூனிச' முத்திரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri