இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது குறித்து கவனம்
இலங்கையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விகிதாசார முறைமையை மாற்றி தொகுதிவாரி அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் முறை
நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களில் 160 உறுப்பினர்கள் நேரடி தொகுதிவாரி முறையில் தெரிவு செய்யப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளது.
ஏனைய 65 உறுப்பினர்கள் விகிதாசார, மாவட்ட அல்லது தேசிய ரீதியில் தெரிவு செய்யும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில காலங்களுக்கு முன்னதாக கட்சித் தலைவர்களிடம் தேர்தல் முறை குறித்து கருத்து கோரப்பட்டதாகவும், அமைச்சரவை உப குழுவொன்றும் இந்த முறையை பரிந்துரை செய்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் முறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் இதனால் இந்த முறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan