கடன் வாங்கியவர்களுக்கு புதிய சலுகைகள்! சபையில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் கடன் வாங்கியவர்களுக்கு இந்த அரசாங்கம் புதிய சலுகைகளை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(05.03.2024) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடு தற்பொழுது பொருளாதார பின்னடைவில் இருக்கும் போது, சாதாரண மக்கள் கடன் வாங்கும் நடவடிக்கையில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
புதிய சலுகை
இந்நிலையில் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அல்லது அடகு வைத்தவர்கள் குறிப்பிட்ட திகதியில் அதனை செலுத்தாவிட்டால் அவை அரசுக்கு சொந்தமாகும் என சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
இந்த விடயம் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை கொண்டு நடத்த மேலும் சுமையாக அமையும்.
ஆகவே கடன் வாங்கிய சாதாரண மக்களுக்கு அரசாங்கம் புதிய சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
