வன்னி தேர்தல் தொகுதியில் பூா்த்தி செய்யப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள்
வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (20) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
"முல்லைத்தீவு மாவட்டத்தில் 89, 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 137 வாக்கெடுப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய பணி
வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான மிக முக்கிய ஏற்பாடாகிய வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டி, வாக்கு சீட்டு அனுப்புகின்ற பணி நிறைவடைந்ததுள்ளது.
இன்று காலை முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலத்திலிருந்து 137 வாக்களிப்பு நிலையங்களுக்கு அதற்கு பொறுப்பாக இருக்கின்ற சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர் தலைமையில் வாக்கு பெட்டி, வாக்கு சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கும் பணியிலே 38 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கு பொறுப்பாக இருக்கின்ற தெரிவு அத்தியட்சக அலுவலகர் இந்த கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகள் தொல்லை இருப்பதால் அதை எதிர்கொள்ள கூடிய விடயம் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.
இந்த பணியில் குறிப்பாக கிராம அலுவலர்கள் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் பொறுப்பாகவுள்ள பிரதேச செயலாளர்கள் இதனை கவனிக்கவுள்ளார்கள்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam