கதிர்காமம் தேவாலய தலைவர் தெரிவு! இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை
கண்டி தலதா மாளிகைக்கு உட்பட்ட கதிர்காமம் தேவாலயத்தின் தலைவரான பஸ்நாயக்க நிலமேவை தெரிவு செய்வதற்காக வாக்களித்த வாக்காளர்கள் சிலருக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக, இலஞ்சம் வழங்கப்பட்டதாக எழுந்த முறைப்பாட்டையடுத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை
இதன்படி சிரேஷ்ட பௌத்த பிக்குகள், கண்டியில் உள்ள பல தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட வாக்காளர்கள், வாக்குமூலங்களை வழங்குவதற்காக மார்ச் 15 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் நின்ற கதிர்காமம் தேவாலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |