சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கான புதிய பணிப்பாளர் தெரிவு
ஐ.எல்.ஓ என்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளராக ஜொனி சிம்ப்சன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
ஜொனி சிம்ப்சன் பாலின சமத்துவம் மற்றும் தொழிலாளர் நலன் பணிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளார்.
மேலும், அவர், கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய பாலின சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாமை தொடர்பான மூத்த நிபுணராக பணியாற்றியுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
அத்துடன், கனடாவைச் சேர்ந்த சிம்ப்சன், கலாசார மானுடவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் இளங்கலை கல்விப் பட்டம் பெற்றவர் ஆவார்.
அதேவேளை, ஐ.எல்.ஓ என்பது தொழிலாளர்களுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிறுவனமாகும். இது சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை அமைப்பதோடு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது.
மேலும், வேலைவாய்ப்பு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூகப்
பாதுகாப்பு தொடர்பான அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை உரையாடலிலும் ஈடுபடுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



