பிரத்தானிய பொதுத்தேர்தலில் ஏற்படவுள்ள மாற்றம் : முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சட்டம்
வெளிநாடுகளில் 15 ஆண்டுகள், அல்லது அதற்கு மேல் வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், பிரித்தானிய பொதுத்தேர்தலில் இனிமேல் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தாகியாவை தவிர்த்து வெளிநாடுகளில் 15 ஆண்டுகள், அல்லது அதற்கு மேல் வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற விதி இருந்தது.
இதனால், வெளிநாடுகளில் வாழும் சுமார் 3 மில்லியன் பிரித்தானியர்கள், பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை இருந்தது.

இந்த விதியை மாற்றக் கோரி, வெளிநாட்டில் வாழும் பிரித்தானியர்களுக்கும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க உரிமை வழங்கவேண்டும் என்று British in Europe என்னும் ஒரு அமைப்பு நீண்டகாலமாக போராடி வந்தது.
அந்த அமைப்பைச் சேர்ந்த Harry Shindler (101) என்பவர், வெளிநாடுகளில் வாழும் பிரித்தானியர்களுக்கும், அவர்கள் எத்தனை ஆண்டுகள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும், பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கவேண்டும் என்று 20 ஆண்டுகளாக போராடிவந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சட்டம் இறுதியாக மாற்றப்பட்டுள்ளது.
கணிக்க முடியாத ஒரு நிலை
இந்த ஆண்டு பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில், வெளிநாடுகளில் வாழும் சுமார் 3 மில்லியன் பிரித்தானியர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

இதனால், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, இந்த முறை தோல்வியை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக தங்களை வாக்களிக்க விடாமல் வைத்திருந்த அரசாங்கங்களுக்கு மத்தியில், இந்த அரசு தங்களுக்கு வாக்களிக்க உரிமை பெற்றுத்தந்துள்ளதால், வெளிநாடு வாழ் பிரித்தானியர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் வாக்குகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க உள்ளதால், வெவ்வேறு கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதால் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என கணிக்கமுடியாத நிலையும் உள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam