அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விவேக் ராமசாமியின் திடீர் முடிவு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட உள்ளது நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு
குடியரசுக் கட்சியின் டோனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் தான் வாபஸ் பெறுவதாகவும் தனது கட்சியைச் சேர்ந்த டோனால்ட் டிரம்பை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் “அடுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தான். அதனை உறுதிப்படுத்த நாம் அனைவரும் பாடுபடுவோம்” என அவர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அயோவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு டொனால்டு டிரம்புக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |