மொரவெவ பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு
திருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் புதிய தவிசாளராக டபிள்யூ.ஆர்.ஜகத் குமாரவேரகொட இன்று (15) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2021ம் ஆண்டிற்கான இரண்டாவது வரவு செலவுத் திட்டம் கடந்த 15ஆம் திகதி தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டநிலையில் இன்று புதிய தவிசாளர் நியமனம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இவரைத் தலைவராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் சித்திரவேல் சசிகுமார் முன் மொழிய அதே கட்சியைச் சேர்ந்த எம்.டி. ரத்னாயக்க வழிமொழிந்தார்.
இவரை நியமிப்பதில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாமல் இவர் ஏகமனதாக தவிசாளராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவர் நியமிக்கப்பட்டதையடுத்து கட்சி பேதமின்றி இன மத வேறுபாடின்றி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஒவ்வொரு சபை உறுப்பினர்களும் தங்களது ஆலோசனைகளையும் திட்டங்களையும் எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் வழங்குமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
இக் கூட்டத்திற்கு முன்னாள் தவிசாளர் பொல்ஹேன்கொட உப ரத்தின ஹிமி, உப தவிசாளர்சாலிய ரத்னாயக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி. ராஜமணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பாரூக் அஸ்மிர் ஆகியோர் சுகயீன விடுமுறை காரணமாகக் கூட்டத்திற்கு சமூகம் தரவில்லை எனவும் சபையின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri