நாடாளுமன்றத்தை கலைப்பதே ஒரே தீர்வு: ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்
பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய பொது தேர்தலை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைத்தல்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்.
எமது அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குகூட கிடையாது. இல்லையெனில் பெரும்பான்மை வாக்குகளுடன் நாடாளுமன்றத்தை கலைக்க கோரிக்கை விடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணிலின் நிலைப்பாடு வெளியானது |
ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்
அந்த கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும். அவர் அதை ஏற்கவில்லை என்றால், எதுவும் செய்ய முடியாது.
எனவே, இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எதிர்காலத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து சிந்திக்க வேண்டும்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை பழைய வாக்களிப்பு முறையிலேயே நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது இன்றியமையாதது.”என குறிப்பிட்டுள்ளார்.





டொனால்ட் டிரம்ப்பிற்கு இருக்கும் ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு உங்களுக்கு வருவதை எப்படி தடுக்கலாம்? Manithan

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
