ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பொறுப்பின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களுக்கு ஆயிரத்து 39.27 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 927 கோடி ரூபா ஒதுக்கீடு
இந்த தொகையானது ரூபா மதிப்பில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 927 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய 2023 ஆம் ஆண்டுக்காக மொத்தமாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு 41 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கீடு
இதில் மூன்றில் ஒரு பங்கு நிதி ஜனாதிபதிக்கும் அவரின் பொறுப்பின் கீழ் வரும் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு 378 கோடி ரூபாவும் தொழிற்நுட்பட அமைச்சுக்கு ஆயிரத்து 156 கோடி ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாவும் நிதி மற்றும் பொருளதாரம் சம்பந்தமான அமைச்சு 61 ஆயிரத்து 393 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.