ஜனநாயகத் தேசியக் கூட்டணி தொடர்பில் தேர்தல் ஆணையகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளும்படி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக மேற்படி கூட்டணியின் முதன்மை வேட்பாளர் மற்றும், கட்சியின் செயலாளர் நாயகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்களான பத்மன் சூரசேன, ஷிரான் குணதிலக, அச்சல வெங்கப்புலி ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த உத்தரவை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியுள்ளது.
நீதிமன்ற விளக்கம்
இது தொடர்பான நீதிமன்ற விளக்கம் இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்னிலையாகி வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |