மன்னாரில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டம் (Photos)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் மன்னார் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு நேற்றைய தினம் (21.02.2023) மன்னார் பஸார் பகுதியில் நடைபெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் உமா சந்திர பிரகாஷ் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தியுள்ளனர்.
இதன்போது, மன்னார் மாவட்டம் - மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும்
ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
