பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மூத்த மகனிற்கு அபராதம் விதிப்பு
ஹஸீஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பின் மூத்த மகனிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் அவர் போதைப்பொருளுடன் நேற்று இவர் கைது செய்யப்பட்டார். திருகோணமலை மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மூத்த மகனான முஹம்மட் மஹ்சூம் அப்துல்லா (31) என்பவரே கைதானார்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் திருகோணமலை பிராந்தியத்திற்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேக நபரைச் சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஹசிஸ் என்றழைக்கப்படும் போதைப்பொருள் ஒரு கிரேம் 170 மில்லிகிராம் மற்றும் ஹெரோயின் 150 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டதாகவும் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரைப் போதைப்பொருளுடன் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் இன்று (24)திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டார்.
அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள்
சுமத்தப்பட்டன.
இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அவர் ஏற்றுக்கொண்டதையடுத்து, ஒவ்வொரு
குற்றச்சாட்டிற்கும் தலா 10,000 ரூபா வீதம், 20,000 ரூபா அபராதம்
விதிக்கப்பட்டது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
